Friday, January 22, 2010

இந்த நடிகர் ஏன் சோபிக்கவில்லை - கோடம்பாக்க கோணங்கி


தொன்னுறுகளின் துவக்கத்தில் இவர்தான் சென்சேஷனல் யங் ஹீரோ. பெண் ரசிகைகள் இவருக்கு தான் அதிகம் .
இவர்தான் வருங்கால் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று எதிர் பார்க்கப்பட்டது . ஒரு சில ஹிட்டுகள் கொடுத்தார் . அப்புறம் தோல்விகள் . பிறகு பெரிய இயக்குனர் மூலம் ஹிட்டு கொடுத்தார் . அப்புறம் சில ஹிட்டுகள் பிறகு ?...

இப்போது வேறு பிசினசில் கவனம் செலுத்தி வருகிறார் . இவர் நல்ல அழகான ஹீரோ தான். நன்கு ஆடவும் தெரியும், சண்டை காட்சிகளிலும் வெளுத்து வாங்குவார். ஆனால் இவரை விட அழகிலும் , திறமையிலும் குறைவு உள்ள நடிகர்கள் எல்லாம் இவரை பின் தள்ளிவிட்டு இன்று கொடி கட்டி பறக்க இவரோ இன்னமும் ஒரு தெளிவில்லாதவராக தான் இருக்கின்றார் . ஏன் இவருக்கு மட்டும் இப்படி நடக்கிறது .

பெரிய ஆல மரத்தின் கீழ் இருக்கும் செடிகள் எப்படி வளராமல் இருக்குமோ அப்படிதான் இவர் கதையும் .
ஆலமரம் இவரின் அப்பா.
அவரும் நடிகர் தான் . அவரே இயக்கி நடித்த படங்கள் ஊத்தி கொள்ள பிறகு கொஞ்ச காலம் வில்லனாக நடித்தார் . மகன் நடிகனான பிறகு மகனின் கால்ஷீட்டுகளை பார்த்து கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

மகனும் அப்பாவுக்கு தப்பாமல் அப்பா பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் இருப்பவர் . மகனுக்கு கதை சொல்ல வரும் புதிய இயக்குனர்களை எல்லாம் அவரின்(தந்தையின்) போக்குக்கு ஒத்து வராவிட்டால் அனுப்பி விடுகிறாராம் .

தன்னை வைத்து எடுத்த படங்களே ஊத்தி கொள்ள , இப்போது மகனை வைத்தும் படங்களை எடுக்கிறேன் என்று அவரின் வாழ்கையையும் வீணடித்து கொண்டு இருக்கிறார் .

இந்த விஷயத்தில் மகனும் சுய முடிவு எடுக்காமல் அப்பா சொல்வதே வேத வாக்காக இருக்கின்றாரம் .

தன் அப்பாவின் வழி வந்த எல்லா நடிகர்களும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு தன் சொந்த முடிவில் படங்களை ஒத்து கொள்வதால்தான் இப்போதும் நிலைத்து நிற்கின்றார்கள் என்பது கோடம்பாக்க வரலாறு .

இன்று இருக்கும் எல்லா இளம் ஹீரோக்களுக்கும் சீனியரான இவரோ இன்னமும் தந்தை சொல் மிக்க மந்திரம் மில்லை என்று இருக்கின்றார் . அந்த தந்தையோ இவரின் முன்னேற்றத்திற்கு அவரை அறியாமலேயே தடையாக இருக்கின்றார்.

மகன் மீது அன்பை பொழியும் அந்த தந்தை தன் மகனுக்கு சுயமாக முடிவு எடுக்க கற்று கொடுப்பாரா ? தன் மகன் தானே படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உதவி செய்வாரா ? இதுவரையில் எந்த கிசு கிசுவிலும் மாட்டாத அந்த மகனின் தொழில் வாழ்க்கையாவது இனிமையாக இருக்கட்டுமே.

உரிமையுடன்
கோடம்பாக்க கோணங்கி

....

4 comments:

Sathis Kumar said...

படத்தின் லிங்க் அது பிரசாந்த் என காட்டிக்கொடுத்து விட்டது.. :)

payapulla said...

உண்மையிலேயே நீங்கள் ஒரு ஒற்றன் தான் .

மேவி... said...

ஷாக் படத்தில் இருந்து அவரது விழ்ச்சி .....

முன்னாடி நான் இவரது பரம ரசிகனாய் இருந்தேன் ....ஆனால் இப்பொழுது இல்லை

payapulla said...

ஒரு காலத்தில் எனக்குமே இவர் பிடித்த நடிகர்தான்