Tuesday, January 26, 2010

பிரபுதேவாவின் இயக்குனர் அவதாரம் -வரமா , சாபமா


ஒரு காலத்தில் ஆடினார் பிறகுஆட்டுவித்தார் அப்புறம் நடித்தார் இப்போது இயக்குகிறார் . பிரபு தேவாவின் பரிணாம வளர்ச்சி இதுதான் . இது அவரின் கிராப்பில் சரியான வளர்ச்சிதானா ?

நடித்து இயக்குபவர்கள் உண்டு . இயக்குனர் ஆகி நடிகரானவர்கள் உண்டு. அனால் நடிகராக இருந்து விட்டு பிறகு இயக்குனர் ஆவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் .

கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஒரு ஹீரோவிற்கு பலவித சிலாக்கியங்கள் உண்டு. மேகப் போட ஒருவன் ஷு போட ஒருவன் தவிர புத்தம் புது ஹீரோயின்கள் .

ஆனால் இந்த சிலாக்கியங்கள் எல்லாம் ஒரு இயக்குனருக்கு கிடையாது . அவர் மிகப்பெரிய இயக்குனராக இருந்தால் ஒழிய. ஆனால் பொறுப்புகள் அதிகம்.

நடிகர் ரிஸ்க் எடுத்து நடித்தாலும் அதோடு அவரின் கடமை முடிந்தது . அனால் ஒரு இயக்குனருக்கோ படம் வெளி வருகின்ற வரைக்கும் பொறுப்புகள் உண்டு .

இதில் கதாநாயகர்கள் அடிக்கின்ற கூத்து வேறு. அனைத்து டெக்னிசியன்களையும் அனுசரித்து ஒன்றிணைத்து சென்று படத்தை முடிக்கவேண்டும் .

இங்குதான் பிரபுதேவாவின் இயக்குனர் அவதாரம் சாபமாகிறது .ஒருகாலத்தில் ஹிட்டான நடிகராக இருந்துவிட்டு , இயக்குனர்களை எல்லாம் , தான் சொல்லும்படிதான் ஷாட்டு வைக்கவேண்டும் என்று சொல்லி ஆட்டி படைத்து விட்டு இப்போது அவரே இயக்குனர் ஆகி இருப்பது நிச்சயம் அது வரமாக இருக்கமுடியுமா என்ன ?

அவர் நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக ஊத்தி கொள்ள இன்று வேறு வழி இல்லாமல் இயக்குனர் ஆகி இருக்கின்றார் .

ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ரஜினி 2000 என்கிற கலை நிகழ்ச்சி நடந்த போது அதில் சில டான்ஸ் சீன்கள் அமைத்து கொடுக்க வந்திருந்தார் பிரபுதேவா . அந்த சமயத்தில் அவருக்கு கதை சொல்ல அவரை பார்த்து பேச காத்திருந்தவர் இயக்குனர் தரணி .வருகின்ற நடு ஹிட் கொடுக்கவில்லை . காத்திருந்த அவரை பார்த்தபோது அவரிடம் யோவ் ஏன்யா பின்னாடியே வந்து உயிரை எடுக்கிற வேற வேலைய பாருயா என்று எரிந்து விழுந்திருக்கின்றார் பிரபுதேவா . இன்று அவரும் நித்தியகண்டம் பூர்ண ஆயுசு உள்ள ஒரு இயக்குனர் .

இது வரமா சாபமா?

....

Saturday, January 23, 2010

பவர்புல் சீன் - ரமணா படம் .










எழுபத்து ஐந்து வருட தமிழ் திரைப்பட வரலாற்றில் வெளிவந்த படங்கள் ஒரு சில வற்றில் மக்களின் உணர்ச்சியை தூண்ட கூடியதாக அமையும் காட்சிகள் மிகவும் பிரபலமாகி விடுவது வழக்கம் .

அந்த வகையில் ஒரு எட்டு வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் நடித்து எ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளி வந்த ரமணா படத்தின் ஹாஸ்பிடல் சீன் மிகவும் பிரபலமானது .

அது மக்கள் சந்தித்து வந்த பிரச்னையை எடுத்து காட்டியதாலோ என்னவோ அதற்கு மக்கள் அனைவரும் ஏகோபித்த ஆதரவை அளித்தனர் . அந்த ஒரு சீனாலே படத்தின் விறுவிறுப்பு ஏகத்துக்கு கூடியது .

அந்த படத்தின் வெற்றி தமிழகத்தில் ஒரு புது அரசியல் கட்சியையும் (தேமுதிக ) ஆந்திரத்தில் ஒரு புது அரசியல் கட்சியையும் (பிரஜ்ஜா ராஜ்ஜியம்) துவங்குவதற்கு காரனமாயிருந்தது .

அதுவரையில் விஜயகாந்தின் படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்க வில்லை . கேப்டன் பிரபாகரனுக்கு பிறகு அவருக்கு கிடைத்த மெகா வெற்றி இது தான் . அப்படிதான் சீரஞ்சீவிக்கும் . தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட அது அவருக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது .

ரமணா படத்தில் விஜயகாந்த தான் வளர்க்கும் சிங் பையன் சைக்கிளில் இருந்து கிழே விழுந்த காயம் பட்டு கொள்ள அவன் கூட்டிக்கொண்டு ப்ரைவேட் ஹாஸ்பிட்டல் போவார் .அங்கு அவனுக்கு ஸ்கேன் எடுக்கவேண்டும் என சொல்லி பணம் பிடுங்குவார்கள் .

அந்த ஹாஸ்பிட்டலுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து விஜயகாந்த் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு சென்று அங்கு செத்து விட்டதாக சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட பிணத்தை கொண்டு வந்து இந்த பணம் தின்னும் ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணுவார் .

அந்த டாக்டர்களும் அந்த பிணத்திற்கு ட்ரீட்மென்ட் கொடுக்க பணத்தை கட்ட சொல்லுவார்கள் விஜயகாந்த்தும் பணத்தை கட்டி ரசீதை காட்டுவார் . பிறகு ட்ரீட்மென்ட் நாடகம் ஆரம்பமாகும் . டாக்டர்கள் ஓடுவார்கள் ,நர்ஸ்கள் ஓடுவார்கள் . மருந்து சீட்டை கொடுத்து அவசரமாக வாங்கி வர சொல்லுவார்கள் . வாங்கி வந்ததும் ஒரு நர்ஸ் வந்து அவசரமாக பிடிங்கிகொண்டு போவாள் .

இதை எல்லாம் அந்த பிணத்தின் மனைவி மகளும் , விஜயகாந்த்தும் வேடிக்கையாக பார்த்து கொண்டு இருப்பார்கள் . அப்புறம் கடைசியாக டாக்டர் வந்து " நாங்க ஆனமட்டும் ட்ரை பண்ணி பாத்துட்டோம் எங்களால காப்பாத்த முடியல . மீதி ரெண்டு லட்சம் பணத்தை கட்டிட்டு பாடி யை வாங்கி கிட்டு
போங்க " என்று சொல்லுவார் .

இப்போது விஜயகாந்த் நீங்க இருவது லட்சம் கொடுத்தாதான் பிணத்தை வாங்குவேன் என்று சொல்லி டெத் சர்டிபிகேட்டை காட்டுவார். அந்த பணத்த வாங்கியதும் அந்த மனைவி இவரு இருந்தப்ப கூட இப்படி சம்பாதிச்சி கொடுக்கல
செத்ததுக்கு அப்புறம் இவ்வளவு சம்பாதிச்சி கொடுத்திருக்கார் என்பார். அப்புறம்
விஜயகாந்த் டாக்டர்களுக்கு உபதேசம் செய்வார் இப்படி போகும் அந்த சீன்.

இந்த சீனை போன்று ஒரு உணர்ச்சிகரமான ஒரு சீன் அதற்கு பிறகு இன்னும் எந்த படத்திலும் வரவில்லை எனலாம். இந்த சீனை உணர்சிகரமாக்கியது இயக்குனரின் திறமைதான் . மக்களுக்கு புரிவது போன்று எடுப்பதற்காக அந்த டாக்டர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை விஜயகாந்த் அந்த பிணத்தின் மனைவி ,மகளுக்கு சொல்வார் அது படம் பார்க்கும் மக்களுக்கும் உணர்ச்சியை தூண்டும் . இந்த விதமாக ஒரு சீனை எப்படி எடுக்கவேண்டும் என்பதில் இயக்குனரின் அறிவு முக முக்கியமாக இருக்கின்றது. இதில் நடித்த விஜயகாந்திற்கும் இந்த பாத்திரம் அப்படியே பொருந்தி போனதுதான் இந்தான் இமாலய வெற்றிக்கு காரணம் பிளஸ் இளையராஜாவின் சரியான பின்னணி இசை .

ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இதை போன்று ஒரு கூத்து ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தது உள்ளது . அது விசயமாக அழுதுகொண்டே ஜெயா டிவியில் பேட்டி கொடுத்த அந்த பெண் அந்த சோகத்திலும் ரமணா படத்தில் நடந்ததை போல நடந்திருக்கு என்று கூறினார் .இப்போது புரிந்து இருக்குமே இது எவ்வளவு பவர்புல் சீன் என்று.

இந்த சினிமாகாரனுக்கு உங்கள் ஆதரவு தேவை . பின்னோட்டம் போடுங்கள் . அப்படியே உங்கள் ஓட்டையும் கொஞ்சம் போடுங்கள் .

Friday, January 22, 2010

இந்த நடிகர் ஏன் சோபிக்கவில்லை - கோடம்பாக்க கோணங்கி


தொன்னுறுகளின் துவக்கத்தில் இவர்தான் சென்சேஷனல் யங் ஹீரோ. பெண் ரசிகைகள் இவருக்கு தான் அதிகம் .
இவர்தான் வருங்கால் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று எதிர் பார்க்கப்பட்டது . ஒரு சில ஹிட்டுகள் கொடுத்தார் . அப்புறம் தோல்விகள் . பிறகு பெரிய இயக்குனர் மூலம் ஹிட்டு கொடுத்தார் . அப்புறம் சில ஹிட்டுகள் பிறகு ?...

இப்போது வேறு பிசினசில் கவனம் செலுத்தி வருகிறார் . இவர் நல்ல அழகான ஹீரோ தான். நன்கு ஆடவும் தெரியும், சண்டை காட்சிகளிலும் வெளுத்து வாங்குவார். ஆனால் இவரை விட அழகிலும் , திறமையிலும் குறைவு உள்ள நடிகர்கள் எல்லாம் இவரை பின் தள்ளிவிட்டு இன்று கொடி கட்டி பறக்க இவரோ இன்னமும் ஒரு தெளிவில்லாதவராக தான் இருக்கின்றார் . ஏன் இவருக்கு மட்டும் இப்படி நடக்கிறது .

பெரிய ஆல மரத்தின் கீழ் இருக்கும் செடிகள் எப்படி வளராமல் இருக்குமோ அப்படிதான் இவர் கதையும் .
ஆலமரம் இவரின் அப்பா.
அவரும் நடிகர் தான் . அவரே இயக்கி நடித்த படங்கள் ஊத்தி கொள்ள பிறகு கொஞ்ச காலம் வில்லனாக நடித்தார் . மகன் நடிகனான பிறகு மகனின் கால்ஷீட்டுகளை பார்த்து கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

மகனும் அப்பாவுக்கு தப்பாமல் அப்பா பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் இருப்பவர் . மகனுக்கு கதை சொல்ல வரும் புதிய இயக்குனர்களை எல்லாம் அவரின்(தந்தையின்) போக்குக்கு ஒத்து வராவிட்டால் அனுப்பி விடுகிறாராம் .

தன்னை வைத்து எடுத்த படங்களே ஊத்தி கொள்ள , இப்போது மகனை வைத்தும் படங்களை எடுக்கிறேன் என்று அவரின் வாழ்கையையும் வீணடித்து கொண்டு இருக்கிறார் .

இந்த விஷயத்தில் மகனும் சுய முடிவு எடுக்காமல் அப்பா சொல்வதே வேத வாக்காக இருக்கின்றாரம் .

தன் அப்பாவின் வழி வந்த எல்லா நடிகர்களும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு தன் சொந்த முடிவில் படங்களை ஒத்து கொள்வதால்தான் இப்போதும் நிலைத்து நிற்கின்றார்கள் என்பது கோடம்பாக்க வரலாறு .

இன்று இருக்கும் எல்லா இளம் ஹீரோக்களுக்கும் சீனியரான இவரோ இன்னமும் தந்தை சொல் மிக்க மந்திரம் மில்லை என்று இருக்கின்றார் . அந்த தந்தையோ இவரின் முன்னேற்றத்திற்கு அவரை அறியாமலேயே தடையாக இருக்கின்றார்.

மகன் மீது அன்பை பொழியும் அந்த தந்தை தன் மகனுக்கு சுயமாக முடிவு எடுக்க கற்று கொடுப்பாரா ? தன் மகன் தானே படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உதவி செய்வாரா ? இதுவரையில் எந்த கிசு கிசுவிலும் மாட்டாத அந்த மகனின் தொழில் வாழ்க்கையாவது இனிமையாக இருக்கட்டுமே.

உரிமையுடன்
கோடம்பாக்க கோணங்கி

....

Wednesday, January 20, 2010

அக்னி நட்சத்திரம் படத்தில் பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு .

இந்தியாவில் மிக சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் பி சி ஸ்ரீராமும் ஒருவர் என்பது தெரிந்த விஷயம்தான் . ஆனால் மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படத்தில்
ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கு ஏற்ப இல்லாமல் அவருடைய லைட்டிங் திறமையை காட்ட வேண்டும் என்பது போலதான் இருந்தது . அதில் அவர் பெரும்பாலான சாட்டுகளுக்கு பில்டர் பயன் படுத்தி எடுத்து இருப்பார் படம் முழுவதும் ஒரு அவுட் ஆப் போகஸில் இருப்பதை போன்ற உணர்வு இருக்கும் தவிர இந்த விதமான ஷாட்டுகள் பிளாஷ் பேக் காட்சிகளில்எடுக்கபடவேண்டியவை என்பது அடியேன் கருத்து . இதே டிரீட்மென்ட் பாடல் காட்சிகளுக்கு ஓகே . ஆனால் படத்தில் பெரும்பாலான காட்சி என்றால் திகட்டதானே செய்யும்.

படத்தில் நடித்த பித்தளை பாத்திரங்கள் கொடுத்து வைத்தவைகள் எனலாம் அவைகளுக்கு என தனி ஸ்பாட் லைட் போட்டு எடுத்திருப்பார் . இந்த படத்தை பொறுத்த வரை ஸ்ரீராம் தான் என்னவெல்லாம் சோதித்து பார்க்க விரும்பினாரோ அதை எல்லாம் செய்து பார்த்து இருப்பார் . கிளார் கட் பண்ணாத ஷாட்டுகள் எப்படி இருக்கும் என்று பார்த்து இருப்பார் .

திரைப்பட கல்லூரியில் பாதி வரை பயின்றவர் இப்போது பழைய மாதிரி சோதனை எல்லாம் செய்வது இல்லை .
...